in

மதுரை அழகர் கோவில் சாலையில் திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை குறித்த கையேடு வெளியீட்டு விழா நடைப்பெற்றது

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் கூட்டரங்கில் வைத்து திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆவண மையம் மற்றும் ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனம் இணைந்து திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை குறித்த கையேடு வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தை சேர்ந்த சுனந்தா மற்றும் திருநங்கைகள் ஆவண மையத்தை சேர்ந்த பிரியா பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்

திருநங்கைகள் மற்றும் திருநங்கைகள் அறுவை சிகிச்சை குறித்த விளக்க கையேடு வெளியிடப்பட்டது. தொடர்ந்து உதவி மையம் துவக்க விழாவும் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள், திருநம்பிகள், கல்லூரி மாணவ மாணவிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருநங்கை ஆவண மையத்தைச் சேர்ந்த பிரியாபாபு கூறும்போது

தமிழகத்திலேயே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தான் அதிகமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எங்க சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த அறுவை சிகிச்சைக்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் முறையாக கடைப்பிடித்தால் எந்த பிரச்சனையும் வராது. என்றார்.

ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தை சேர்ந்த சுனந்தா கூறும்போது

மதுரையில் திருநங்கை ஆவணம் மையத்துடன் இணைந்து திருநங்கைகள் அறுவை சிகிச்சைக்கு தேவையான உதவிகள் செய்ய இருப்பதாகவும்,

அதேபோன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு என
உதவி‌மையம் அமைக்க உள்ளதாகவும்,

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு வரக்கூடியவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவைகளை எடுத்து கூற பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

உறுப்பு மாற்றி அறுவை சிகிச்சைக்கு வரக்கூடியவர்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்து எடுத்துக் கூறுவதற்கு பணியாட்கள் நியமிக்கப்படுகின்றனர் என்றார்.

குறிப்பாக ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை திருநங்கை மற்றும் திருநங்கைகளுக்கு உதவி மையம் இயங்கி வருவதாகவும்

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு வாரத்திற்கு 30 லிருந்து 35 நபர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரக்கூடிய நிலையில் குறிப்பாக மதுரைக்குத்தான் அதிகமாக வருகிறார்கள்
என்றும்

இது போன்ற ஒரு திட்டம் இந்தியாவில் முதல்முறையாக மதுரையில் தான் என்று தெரிவித்தார்..

What do you think?

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் தொழிலாளர் கட்சி சார்பில் வெற்றி

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் தம்பதியினர் தர்ணா