நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம்
நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது நிறைவேறி இருக்கிறது சிறப்பான தரிசனம் பெற்றேன் – மீனாட்சியம்மன் கோவிலி்ல் சாமி தரிசனம் செய்த பின்னர் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேட்டி
ஆந்திர துணை முதலமைச்சரும் ஜனாசேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில் இன்று காலை பழனி பாலதண்டாயுதபாணி முருகன. கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் மாலை மதுரைக்கு வருகை தந்த பவன் கல்யாண் அறுபடை வீடுகளின் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் பின்னர் உலகப்பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன. கோவிலில் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார்.
முதலில் மீனாட்சியம்மன் சன்னதியிலும், பின்னர் சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் தரிசனம் செய்தார். இதனையடுத்து துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு கோவில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பவன்கல்யாணை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கோவில் முன்பாக கூடினர்.
இதனைத்தொடர்ந்து கோவிலில் தரிசனம் முடித்து வெளியில் வந்த துணை முதலமைச்சர் பவன்கல்யாண் செய்தியாளர்களிடம் பேசியபோது :- நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது நிறைவேறி இருக்கிறது சிறப்பான தரிசனம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.