in

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது


Watch – YouTube Click

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

 

தென் தமிழகத்தில் பிரபல ரயில் நிலையங்களில் ஒன்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

விடுமுறை தினம் முடிவடைந்து இன்றைய தினம் வெளியூர்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் பலர் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது மதிய வேளையில் சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு மர்ம நபர் ஒருவரால் தொலை பேசி அழைப்பு கிடைக்கப்பெற்றது.

இதில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு மாநகர காவல் துறையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் பிரிவு போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், இருப்பு பாதை காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் என பல்வேறு துறை சார்ந்த காவல் துறையினர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு விரைவு படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் சர்வீஸ் மையம், இருப்பு பாதை, ரயில் நிலைய உணவகங்கள், பயணிகளின் உடைமைகள் உள்ளிட்டவைகளும் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்த தொலைபேசி எண் நெட்வொர்க் லொகேஷன் வைத்து நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் கீதா தலைமையிலான போலீசார் மர்ம நபர் குறித்த தகவலை தீவிரமாக தேடத் தொடங்கினர்.

பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது நெல்லை தச்சநல்லூர் பகுதியில் இருந்து அந்த போன் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது தொடர்ந்து போன் செய்த நபர் யார் என விசாரித்த போது நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி என சிவபெருமாள் என்பதையும் கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் வண்ணாரப்பேட்டை பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சிவபெருமானை தனிப்படை போலீசார் பிடித்தனர். தொடர்ந்து நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் கீதா தலைமையில் தனிப்படை போலீசார் சிவபெருமானிடம் விசாரணை மேற்கொண்ட போது மது போதையில் தொலைபேசியில் அழைப்பு விடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நெல்லை தச்சநல்லூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிவபெருமானை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் தனி படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை தினம்முடிந்து சொந்த ஊர் திரும்புவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் தகவலால் போலீஸ் குவிக்கப்பட்ட சூழலில் பரபரப்புடன் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் காணப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

ஊருக்குள் புகுந்த கரடி மரத்தின் மீது நின்றதால் பொதுமக்கள் பீதி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அமைந்திருக்கிறநவாப் ஜாமிஆ மசூதியில் சிறப்பு தொழுகை