32 ஆண்டு கால அநீதியை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் அவர்கள் தலைமையிலும், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் செயலாளர் நிஸ்தார் அவர்கள் முன்னிலையிலும் பாசிச எதிர்ப்பு நாள், பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் 32 ஆண்டு கால அநீதியை எதிர்த்து மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாசிச பாஜகவை எதிர்த்து கோஷங்கள் முழங்கப்பட்டது, சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பதாக தேர்தல் வாக்குறுதியில் வழங்கிய திமுக முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்ற பொய் பிரச்சாரத்தை இனிமேல் செய்ய முடியாது, அதற்கான பரிசை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்கள் திமுகக்கு எதிர்க்கட்சி என்ற நிலையை தான் தருவார்கள், எதிர்வரும் காலங்களில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி அதே இடத்தில் ஒரு நாள் மீண்டும் எழுப்பப்படும், அதுவரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கள் போராட்டம் ஓயாது போன்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆரிப்கான் தொகுப்புரை வழங்கினார், தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜுதீன் மற்றும் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் சுல்தான் ஆகியோர் துவக்க உரை ஆற்றினார்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மாநில பேச்சாளர் கோவை ராஜா உசேன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள், திருப்பரங்குன்றம் தொகுதி தலைவர் ஹாஜி அலி நன்றியுரை ஆற்றினார், இப்ப போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டனர்.