in

மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற நார்கோ ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்


Watch – YouTube Click

மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற நார்கோ ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

 

மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற நார்கோ ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கம், கடத்தல் மற்றும் விற்பனையை தீவிரமாகக் கண்காணித்து தடுப்பது உட்பட பல்வேறு ஆலோசனை செய்யப்பட்டது.

நார்கோ ஒருங்கிணைப்புக் குழுவின் 4வது கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக‌க் கருத்தரங்கக் கூடத்தில் இன்று‌ நடைபெற்றது.

முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சுவாதி‌ சிங், மாவட்ட துணை ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ், உதவி‌ ஆட்சியர் சம்யக்‌ ஜெயின், மாவட்ட துணை ஆட்சியர் வினயராஜ் மற்றும் கல்வித்துறை, நலவழித்துறை, சமூகநலத்துறை, வனத்துறை, துறைமுகத் துறை, கடலோரக் காவல் படை, வேளாண் துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 3வது மாவட்ட அளவிலான NCORD குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் மீதான நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.

போதைப்பொருட்கள் புழக்கம், கடத்தல் மற்றும் விற்பனையைத் தீவிரமாகக் கண்காணித்துத் தடுத்தல், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஊக்குவித்தல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், மாணவர்களிடையே விளையாட்டை ஊக்குவித்தல், போதைப்பொருள் கண்டறிதலுக்கான உபகரணங்களின் தேவைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களின் மேற்பார்வையிடுதல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

சமவேளை சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் பேரணி

பிரதமர் குறித்த கேள்விக்கு அவரிடம் போய் கேளுங்கள் என அமைச்சர் நேரு பேட்டி