தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம்
புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த தேர்தல் நன்னடத்தை விதிகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தின் கருத்தரங்கக் கூடத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்வரை, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடைபிடிக்கப்பட வேண்டிய தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் மற்றும் “செய்ய வேண்டியவை”, ”செய்யக்கூடாதவை” குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
மேலும் தேர்தல் செலவினங்களை வழிகாட்டுதல்களின்படி பராமரித்தல் மற்றும் குறித்த காலத்திற்குள் செலவுக் கணக்குகளைச் சமர்ப்பித்தல் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு இக்கூட்டத்தில் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
கூட்டத்தில் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன்
கோவில் சர்ச்சை மசூதிகளில் வாக்கு சேகரிக்க கூடாது.
வாக்கு சீட்டில் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கக் கூடாது அனுமதி இல்லாமல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது மது விநியோகம் செய்யக் கூடாது இதை எல்லாம் செய்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறலாகும் எனவே அரசியல் கட்சிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.