in

திமுக கூட்டணி கட்சிகளுடன் செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது


Watch – YouTube Click

திமுக கூட்டணி கட்சிகளுடன் செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது

கடலூரில் திமுக கூட்டணி கட்சிகளுடன செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து கூட்டணி
கட்சியின் பிரமுகர்கள் அனைவரும் பங்கேற்றனர்

நகர மன்ற தலைவர் கே எஸ் ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில்
அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் திரு DR. விஷ்ணுபிரசாத் அவர்களும்
மற்றும்.தோழமை கட்சியை சேர்ந்த அனைவரும் இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் இக்கூட்டத்தில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திரு DR. விஷ்ணு பிரசாத் அவர்கள் கடலூர் தொகுதியில் நிற்பது எனக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகவும் தன்னை வெற்றிபெற செய்வதன் மூலமாக கடலூர் மக்களுக்கு நான் என்றும் சிறப்புடன் பணிபுரிவேன் என்றும் என்னோடு இருப்பது அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களும் இணைந்து இருப்பதால் எனக்கு மிகுந்த வெற்றி வாய்ப்பில் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கை கூப்பி பாதம் பணிந்து வேண்டிக் கொண்டார்
விழா பேருரை ஆற்றிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தோழமைக் கட்சிகளும் திமுகவினரும் காங்கிரஸ் கட்சியில் கை சின்னததில் நிற்கும் டாக்டர் விஷ்ணு பிரசாத்தை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் அதேபோல் சிதம்பரம் தொகுதியில் நிற்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்களை பானை சின்னத்திலும் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்

பின்னர் விழா பேருரையில் கூட்டணி என்பது கொள்கை பிடிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் விஜயகாந்த் கட்சியை பொருத்தவரையில் அவர்களுக்கு கொள்கை கிடையாது யாரிடமும் கூட்டணி பேசக்கூடிய ஒரு கட்சியாகத்தான் உள்ளது என்றும் பேரம் பேசுகிற கட்சியாக விஜயகாந்த் கட்சி உள்ளது எனவும் மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என பேசினார்


Watch – YouTube Click

What do you think?

ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள் மோடி

சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்