in

மதுரை அழகர்மலை மீது மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கு

மதுரை அழகர்மலை மீது மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கு : முதலுதவி செய்து காப்பாற்றி மீண்டும் பத்திரமாக விடப்பட்டது

மதுரை மாவட்டம் அழகர் மலை மீது அமைந்துள்ள முருகனின் ஆறாவது படை வீடு பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு தரிசனம் செய்வதற்காக மலைமீது சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் வனப்பகுதியாக உள்ள இம்மலையில் வன உயிரினங்கள், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் முருகன் கோவில் அருகே உள்ள மின்சார கம்பத்தில் ஏரி திரிந்த குரங்கு ஒன்று எதிர்பாராத விதமாக மின்சார வயரில் uரசியதில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது.

இதனை கண்ட அருகில் கடையில் வேலை பார்க்கும் தர்மராஜன் என்பவர் உடனடியாக குரங்கை மீட்டு அதற்கு முதலுதவி சிகிச்சைகள் ( தண்ணீர் தெளித்தும் காற்று விசிறி விட்டு) குரங்கு பத்திரமாக உயிருடன் மீட்க போராடினார். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே குரங்கு மீண்டும் அதன் இயல்பு நிலைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து குரங்கை பத்திரமாக அருகில் உள்ள பகுதியில் விட்டார். அப்போது துரிதமாக குரங்கு அங்கிருந்து அருகில் உள்ள மரத்திற்கு தாவி சென்றது. இதனை கண்ட அப்பகுதியில் இருந்த பக்தர்கள் அந்த நபரை வெகுவாக பாராட்டினர். உயிருக்கு போராடிய குரங்கை முதலுதவி செய்து மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

What do you think?

துணைவேந்தர் நியமனத்தை பொருத்தமட்டிலும் எந்த அளவிற்கு ஆளுநர் அவர்களாலும் அரசாலும் இடர்பாடு என்பது அனைவருக்கும் தெரியும்

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவதூறாக பேசியதாக புகார்