ஒரு தாயின் கண்ணீர் சொல்லும் கதை …ஜே. பேபி…
ஒரு தாயின் கண்ணீர் சொல்லும் கதை …ஜே. பேபி…மனநலம் பாதிக்க பட்ட அம்மாவை தேடி கண்டு பிடித்தார்களா? மகன்கள்
ஏழ்மையான குடும்ப சூழலில் இருக்கும் ஊர்வசி தனது கணவர் இறந்த பிறகு தனது மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்களை தனியாளாக போராடி வளர்கிறார் என்பது தான் ‘ஜே. பேபி’ கதை..
சுரேஷ் மாரி இயக்கிய இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா புகழ், மாறன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பா ரஞ்சித், அபயானந்த் சிங், பியூஷ் சிங், சவுராஷ் குப்தா, அதிதி ஆனந்த் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார், ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மூத்த மகன் மாறனுக்கு திருமணம் நடக்கும் பொழுது மணப்பெண் அவரை பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடி விடுகிறார். அந்த குடும்பத்தில் இருக்கும் இன்னொரு பெண்ணை மகன் தினேஷ் திருமணம் செய்து கொள்கிறார். இது மாறனுக்கு பிடிக்காமல் தினேஷிடம் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகளால் மனநிலை பாதிக்கப்பட்ட ஊர்வசி கொல்கத்தா சென்று விடுகிறார்.. எப்பொழுதுமே சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அண்ணன் தம்பிகள் இருவரும் தன் தாயான நடிகை ஊர்வசியை தேடி கொல்கத்தா செல்கிறார்கள்.
இவர்கள் இருவரும் ஊர்வசியை கண்டுபிடித்தார்களா? கடைசியில் மூவரும் ஒன்று சேர்ந்தவர்கள் என்பது தான் மீதி மொத்த படத்தையும் தனது உணர்வுபூர்வமான நடிப்புகளால் தாங்கி நிற்கிறார்.
நடிகை ஊர்வசி இவர் பிள்ளைகளிடம் காட்டும் அன்பாகட்டும் , இரக்கத்தை பிரதிபலிக்கும் கட்சியாகட்டும், வம்பு செய்வதிலும் சேட்டை செய்வதிலும் எல்லாம் கதாபாத்திரத்திலும் தனது இக்மார்க் நடிப்பால் பின்னி எடுக்கிறார் குறிப்பாக மனநிலை காப்பகத்தில் இருக்கும் ஊர்வசி தன் நிலையை நினைத்து வருந்தும் காட்சிகளில் இவர் கண்ணில் கண்ணீர் வருவதற்கு முன்பே ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார்.
இளைய மகனாக வரும் தினேஷ் ஷேர் ஆட்டோ காரராகவும் அன்பான கணவராகவும் பாசத்திற்கு ஏங்கும் தம்பியாகவும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார்.
எல்லோரையும் சிரிக்க வைக்கும் மாறன் ஒரு கட்டத்தில் அவர் அழும் தருணத்தில் ரசிகர்களையும் அழ வைத்து விடுகிறார். தனது நடிப்பை பாடி லாங்குவேஜ் மூலம் அழகாக வெளிப்படுத்தியவர் ராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் நடிக்கும் மூர்த்தியின் கதாபாத்திரம் எல்லோரும் நெஞ்சையும் அசைத்துப் பார்த்துவிட்டது. emotion…சுடன் கைகோர்த்து நெஞ்சை தொடும் டோனி பிரிட்டோ வின் பின்னணி இசை அருமை…
ஜெயந்த் சேது மாதவன் ஒலிப்பதிவில் சென்னையும் கல்கத்தாவையும் கண்முன்னே நிறுத்திவிட்டார். படத்திற்கு மைனஸ் திரைக்கதையின் நீளம் சற்று குறைத்திருக்கலாம் எதார்த்தமான வாழ்க்கையை உணர்வுபூர்வமாகவும் அம்மா மகன்களின் பாசத்தையும், கடைசி காலத்தில் அம்மாவை அரவணைக்க வேண்டும் நாம் கண்டு கொல்லாமல் விட்டு விடுவதால் வரும் சங்கடத்தை அழகாக சொல்லி இருக்கிறார். இயக்குனர் சுரேஷ் மாரி குடும்பத்துடன் சென்று பார்க்கும் அருமையான படம் ஆனால் திரும்பிவரும்பொழுது மனபாரமும் மனமாற்றமும் நிச்சயம்.
தாய்க்கு நிகர் தெய்வம் வேறில்லை
அவள் அன்பிறகு ஈடு இணையில்லை
உயிர் கொடுத்து பெற்றவளை
உயிர் போகும் வரை அரவணை