புதுச்சேரி சூரியன் எப் எம் சார்பில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி நடைபெற்றது
புதுச்சேரி சூரியன் எப் எம் சார்பில் உப்பளம் மைதானத்தில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம், விஜய் ஆண்டனி இசையமைத்து பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பல பாடல்களை பாடகர்கள் பாடினர். அப்போது ரசிகர்கள் உற்சாகம் ஆகி விசில் அடித்தும், கைதட்டியும் ஆரவாரம் செய்தனர். இதே போல் விஜய் ஆண்டனி தனது பாடல்களை பாடிய போது, ரசிகர்களின் கரவொலி விண்ணை பிளந்தது.
புதுச்சேரி சூரியன் எப் எம் சார்பில் ரிதம் என்ற பெயரில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனின், இசை நிகழ்ச்சி உப்பளம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த விஜய் ஆண்டனி, டிஜிட்டல் காணொளி திறக்க, மேடைக்கு அழைத்து வரபட்டார். பின்பு சுமார் 3 மணி நேரம் விஜய் ஆண்டனி இசையமைத்து பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பல பாடல்களை பாடகர்கள் பாடினர்.
ஆத்திச்சுடி, அழகாய் பூக்குதே, சின்னத்தாமரை, நாக்க முக்க, மஸ்காரா, சிலாக்ஸ், தைலோமா தைலோமா, இச்சு இச்சு, இடிச்சா பச்சரிசி, பியா பியா, சொன்னா புரியாது, பாம்பே பொண்ணு போன்ற ஹிட் பாடல்களை பாடகர்கள் பாடிய போது ரசிகர்கள், பொதுமக்கள் நடனமாடி அசத்தினர்.
இதே போல் விஜய் ஆண்டனி தனது பாடல்களை பாடிய போது, ரசிகர்களின் கரவொலி விண்ணை பிளந்தது. மேடையில் நடந்து சென்று விஜய் ஆண்டனி பாடல்களை பாடி நடந்து சென்ற போது ரசிகர்கள் உற்சாகம் ஆகி விசில் அடித்தும், கைதட்டியும் ஆரவாரம் செய்தனர். மேலும் ரசிகர்கள் அவரிடம் செல்ஃபி எடுக்க, ஆர்வம் காட்டி மேடைக்கு ஏறி வந்தனர்.
இந்த இசை நிகழ்ச்சி காரணமாக சுமார் 3 மணி நேரம் விஜய் ஆண்டனி ரசிகர்கள், பொதுமக்கள் இசை வெள்ளத்தில் மிதந்தனர்.