ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு ராணுவ சீருடை அணிந்த சார்லஸ் மன்னரின் புதிய உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
வின்ட்சர் கோட்டையின் கிராண்ட் காரிடாரில் எடுக்கப்பட்ட இந்த படம் பதக்கங்கள், வாள் மற்றும் அலங்காரங்களுடன் பீல்ட் மார்ஷலின் சம்பிரதாய உடையை அணிந்து மன்னர் அமர்ந்திருப்பதாக அமைந்துள்ளது.
ஆயுதப்படை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் இறுதி சனிக்கிழமை அனுசரிக்கபடுகிறது, மேலும் இது படைவீரர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் சேவை குடும்பங்களுக்கு மரியாதை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆயுதப்படை தினத்தைக் குறிக்கும் வீடியோ செய்தியில் ராணி, ராணுவ வீரர்கள் மற்றும் பெண்களை தேசத்திற்கு “உத்வேகம், உறுதி மற்றும் பெருமையின் ஆதாரமாக” பாராட்டியுள்ளார். மேலும் தனது வீடியோவில், “எங்கள் நாட்டைப் பாதுகாக்க நீங்கள் செய்யும் அனைத்திற்கும்” ஆயுதப் படைகளின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நன்றி தெரிவித்தார், மேலும் உலக அமைதிக்காக “இறுதி தியாகம்” செய்தவர்களை நினைவு கூர்ந்தார்.