மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏறாளமானோர் மனு அளித்தனர்
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏறாளமானோர் மனு அளித்தனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தினகரன் தலைமையில் தமிழக அரசு மின்கட்டண உயர்வை அமல்படுத்திய நிலையில் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என வலியுறுத்தி உடனடியாக மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்த மனு அளிக்கும் நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.