in

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு கிராம் தங்க மோதிரம் 

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு கிராம் தங்க மோதிரம் 

 

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசளித்தார்.

துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா, கொடிமரம் கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் விழா என துணை முதல்வரின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினர்.

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்றைய தினம் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகள் ஒரு கிராம் தங்க மோதிரத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 14 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது .

மேலும் இன்று இரவு வரை பிறக்கப் போகும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்குவதாக தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியை ஒட்டி திண்டுக்கல் மேயர் இளமதி துணை மேயர் ராஜப்பா மற்றும் மாவட்ட ஒன்றிய திமுக நிர்வாகிகள் மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

What do you think?

புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது – முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை