in

பாண்டி மெரினா கடல் பகுதியில் தத்தளித்த மனிதனை காப்பாற்றிய ரோந்து படை


Watch – YouTube Click

பாண்டி மெரினா கடல் பகுதியில் தத்தளித்த மனிதனை காப்பாற்றிய ரோந்து படை

இந்திய கடலோர காவல்படையின் ரோந்து படகு INTERCEPTOR CRAFT 307 வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டு வரும் வேளையில் இன்று காலை பாண்டி மெரினா கடல் பகுதியில் யாரோ ஒருவர் தத்தளிப்பதை கண்டுள்ளனர். உடனே படகை வேகமாக அவரை நோக்கி திரும்பியுள்ளனர். அப்போது படகில் இருந்த உயிர் மிதவையை அவரை நோக்கி வீசி அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். உடனடியாக அவருக்கு படகில் உள்ள மருத்துவ உபகரணங்களைக் கொண்டு முதலுதவி சிகிச்சையும் அளித்துள்ளனர்.

விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவரது மகன் பாலமுருகன் என்பதும் அவர் பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரோலக்ஸ் என்ற மீன்பிடி படகில் மீன்பிடிக்க செல்லும் போது தவறுதலாக விழுந்து விட்டார் என்பதும் தெரிய வந்தது. அவரை கடலோர காவல் படையினர் கடலோரப் பாதுகாப்பு குழும போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு மீனவரை காப்பாற்றிய கடலோர காவல்படை வீரர்களை புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ் நாடு பகுதியின் கமாண்டர் டிஐஜி SS டஸிலா வெகுவாக பாராட்டினார்.


Watch – YouTube Click

What do you think?

கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மக்களவைத் தேர்தலில் ஊழல் கட்சிகளுக்கு இடமளிக்கக்கூடாது