தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைதி புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைதி புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறினார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளியில் தனது வாக்குப்பதிவை செலுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்றும் மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும் ஆழமான ஏக்கம் இருக்கின்றது என்றும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றும் இது சித்திரம் மாதம் மாம்பழ சீசன் என்று கூறினார்.
இந்த நிலை வரை தேர்தல் அமைதியாக நடைபெறுகிறது என்றும் பண பட்டுவாடா அரக்கோணம் தொகுதியில் பணம் கட்டு கட்டாக பிடித்துள்ளனர் மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சி தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளை வைத்து தொடர்ந்து நேற்று இரவு முதல் கொடுத்து வருகின்றனர் என்றும் கூறினார்.
அதற்குக் காரணம் தேர்தல் அதிகாரிகள் 99 சதவீதம் தமிழக அரசு அதிகாரிகளாக உள்ளனர் அதனால் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என்றும் தேர்தல் நடைமுறையில் மாற்றம் வர வேண்டும் என்றும் மேலும் தேர்தல் விதிகள் மிக கடுமையாக ஆக்க வேண்டும் என்றும்
வேட்பாளர் பணம் கொடுத்தால் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வட இந்தியாவில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நடைமுறை இல்லையென்றும் தமிழகத்தில் பணம் கொடுக்கும் பழக்கம் ஒரு இயக்கமாக மாற்றி உள்ளனர் என்றும் இது தவறான ஒரு இயக்கம் என்றும்
பொதுமக்களும் பழகிவிட்டனர் என்றும் தமிழகத்தில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் கடந்த காலங்களில் பணம் யார் வைத்துள்ளனாரோ அவர்களுக்கு சாதகமாக நடைபெறுகிறது என்றும்
ஆனால் இந்த தேர்தலில் பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் தமிழக மக்கள் எங்கள் கூட்டணியில் முடிவு செய்து விட்டனர் என்றும் தமிழகத்தில் அமைதி புரட்சி நடைபெறுகிறது என்றும்
தமிழக மக்களின் யாருக்கு ஓட்டளிப்பீர்கள் என்று கேட்டால் அமைதியாக சிரித்துக் கொண்டே இருக்கின்றனர் என்றும் தமிழகத்தில் இரு கட்சிகள் ஆட்சி செய்தது போதும் என்றும் முடிவு செய்துவிட்டனர் என்று கூறினார்.