எங்களை ஏன் சோதிக்கிறீர்கள் என கேரளாவை சேர்ந்த நபர் கேட்டதற்கு காவலர் அசத்தல் பதில்
எந்த தப்பு இல்லா… எலக்சன் டைமானு …காவலர்கள் காரை பரிசோத்த போது குடும்பத்துடன் செல்லும் எங்களை ஏன் சோதிக்கிறீர்கள் என கேரளாவை சேர்ந்த நபர் கேட்டதற்கு மலையாளத்தில் பதில் சொன்ன காவலர்
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்த நிலையில் நேற்று மாலை முதல் தமிழகப் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த காரணத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 11 சோதனை சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்ட எல்லையான காணுரில் அதிகாலை முதல் நிலையான கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த காவல்துறையினர் வட்டாட்சியர் உள்ளிட்ட பறக்கும் படையினர் அவ்வழியாக கடந்து சென்ற நான்கு சக்கர வாகனங்களை மறைத்து சோதனை செய்தனர்.
அப்போது கேரளாவைச் சேர்ந்த ஒரு ஜீப்பை அவர்கள் மறைத்து பரிசோதனை செய்யும்போது டிக்கியில் இருந்த பேக்கை திறக்க முடியாத காரணத்தினால் காவலர் ஒருவர் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார் என்று காரில் வந்தவரிடம் கேட்டதற்கு தாங்கள் குடும்பத்துடன் வந்திருக்கிறோம் எங்களை எதற்கு சோதிக்கிறீர்கள் என்று டென்ஷனாக கேட்டார்.
அப்போது அருகில் இருந்த காவலர் ஒருவர் எந்த தப்பும் இல்லா எலக்சன் டைமானு என்று கூறியதுடன் பெட்டிகளை பரிசோதித்து விட்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அப்பகுதியாகச் சென்ற அனைத்து நான்கு சக்கர வாகனங்களையும் காவல்துறையினர் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுப்பி வைத்தனர்.