அதிகாலையில் கதவை தட்டிய நபரால் பரபரப்பு
அதிகாலையில் கதவை தட்டிய நபரால் பரபரப்பு. தன்னை கொலை செய்ய வந்திருப்பதாக எண்ணி பதட்டம் அடைந்த தம்பதியினர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் புகார்.
புதுச்சேரி அண்ணா சாலை அருகில் உள்ள திருமுடிநகர், நடராஜர் 1வது வீதியில் வசிக்கும் தம்பதியினர் வைத்தியநாதன் குமாரர் வை. பாலா என்ற பாலசுப்ரமணியன் (வயது 62), எனது மனைவி, பேபி (வயது 52) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிகாலை 2.30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் வீட்டின் படிக்கட்டில் அமைந்துள்ள இரும்பு ஷட்டரை திறந்து கொண்டு படிகட்டில் ஏறி, வாசற் படியில் உள்ள கிரில் கேட்டையும் மற்றும் மரக்கதவையும் தட்டி அடையாளம் தெரியாத நபர் தன்னை யாரோ கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அவரை காப்பாற்றும் படியும், சத்தம் போட்டு ஆவேசமாக கூறியுள்ளார். இதில் பயந்து போன தம்பதியினர். கதவுகளை திறக்காமல் இருந்துள்ளனர் காலை விடிந்தவுடன் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் பெரிய கடை காவல்துறையினர் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் இருந்த நபரை விசாரணை செய்தபோது கோவிந்த- சாலையை சேர்ந்த சுரேஷ் என்ற ஜிந்தாக் என்பது காவல்துறைக்கு தெரியவந்தது இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….
புகார் அளித்த வை.பாலா புதுவைமாநில மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்க தலைவராக இருந்து வருகிறார். மேலும் பல்வேறு சம்பவங்களை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர் இதனால் தன்னை அச்சுறுத்தும் நோக்கில் தாக்குவதற்கு வந்திருக்கலாம் என எண்ணி அவர் புகார் தெரிவித்துள்ளார்….