விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு.
விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் செல்லாமல், பேசலாம், அகிம்சை வழியில் போராட்டம் நடத்தலாம் என்று மூன்று உயர் நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில், குத்தகை விவசாயி தான் குத்தகை செய்யும் நிலத்தில் நெல், வாழை, கரும்பு, எள் போன்றவை சாகுபடி செய்தால் தான் தனது வாழ்வாதாரத்தையும், விவசாயத்தியும் காக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண்மை துறையே கூறுகிறது.
ஆனால், திருச்சி வருவாய் நீதிமன்ற நீதிபதி குத்தகை விவசாயிகள் நெல் சாகுபடி மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்த பயிறும் சாகுபடி செய்ய கூடாது என்று கூறி, அவ்வாறு இல்லை எனில் குத்தகை பதிவேட்டில் இருந்து ரத்து செய்துவிடுவேன் என்று உத்தரவிட்டு ரத்து செய்து வருகின்றார்.
வருவாய் நீதிபதி, இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமலும், வாழ்வதாரத்தை இழந்து வருகின்றனர், விவசாயிகளுக்கு அநீதி வழங்கும் திருச்சி வருவாய் நீதிபதி செல்வராஜ் அவர்களை பணி நீக்கம் செய்ய கோரி 20.06.2024 அன்று சென்னை சென்று அத்துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க சென்ற விவசாயிகளை மறித்து கைது செய்து அடைத்து வைத்தனர்.
அவர்களை விடுவிக்க கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய 5 விவசாயிகளை மாநகர காவல்துறையினர் டவரில் மேலே ஏறி விவசாயிகளை கனிவுடன் இறக்காமல், மேலே அடித்து, கீழே இழுத்துவந்து மிதித்து, தகாத வார்த்தைகளால் திட்டியும், லத்தியால் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள்.
தாக்குதலில் கொடுங்காயம் ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து விவசாயிகளின்மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய கோரி 22.06.2024 இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி நேரில் சந்தித்து பேசினார்கள்.
மேலும் அவரிடம் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.