தாழ்வு மனப்பான்மை இல்லாமல் தன்னம்பிக்கையோடும் முயற்சியோடும் படித்தால் தனது லட்சியத்தை அடையலாம் என்று அரசு பள்ளி ஆண்டு விழாவில் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தெரிவித்தார்..
புதுச்சேரி வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார்.ஆசிரியர் சரவணன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் புதுச்சேரி கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் தனச்செல்வன் நேரு கலந்து கொண்டு, பள்ளியின் லோகோவை அறிமுகம் செய்து, கடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருக்கனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் பள்ளியில் நடந்த மாணவர்களுக்கான விளையாட்டு, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி, பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய இன்ஸ்பெக்டர் ராஜகுமார்…நான் எனக்காக படிக்கவில்லை எனது பெற்றோர்களுக்காக படித்தேன் எனது அப்பா 1-வது படித்தவர் எங்க அம்மா படிக்காதவர் படிப்பறிவு இல்லாத ஒரு பெற்றோர்களிடமிருந்து படித்தவன் தான் நான் என்று குறிப்பிட்டார்..
தன்னைப் படிக்க வைத்தது மூன்று காரணங்கள் தான் ஒன்று தாழ்வு மனப்பான்மை, இன்னொன்று தன்னம்பிக்கை மற்றும் முயற்சி அதுதான் இன்று என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது என்று பெருமைப்பட பேசினர்.
இது போன்ற மேடையில் நீங்களும் பேச வேண்டுமென்றால் தாழ்வு மனப்பான்மை அகற்றி தன்னம்பிக்கையோடும் முயற்சியுடன் படித்தால் வாழ்க்கையின் லட்சியத்தை அடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்…
விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.