in

சென்னையில் இயங்கி வந்த பிரபல தியேட்டர் மூடப்படுகிறது

சென்னையில் இயங்கி வந்த பிரபல தியேட்டர் மூடப்படுகிறது

தற்பொழுது பழைய தியேட்டர்கள் மூடப்படுவதும் அந்த இடத்தில் மால் கட்டுவதும் தொடர்ந்து நடக்கிறது சென்னை அசோக் நகரில் இயங்கி வந்த உதயம் தியேட்டர் வளாகத்தில் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் ஆகிய நான்கு திரைகள் இயங்கி வந்தன.

தற்பொழுது அந்த தியேட்டரை பிரபல நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது அங்கு 25 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மால்கள் கட்டப்பட உள்ளது.

இதற்காக உதயம் தியேட்டர் விரைவில் இடிக்கப்பட உள்ளது, இந்த தியேட்டர் 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டு ஏறத்தாழ 41 ஆண்டுகள் இயங்கிய இந்த தியேட்டரை மூடுவது ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனாவுக்கு பிறகு ஓ டி டி தளங்களில் படங்கள் வெளியிடுவதால் தியேட்டர் அதிபர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். திரைக்கு வந்து படம் பார்ப்போரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது.

இந்த வரிசையில் ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக இயங்கி வந்த சாந்தி, ராக்கி, மேகலா, வசந்தி, ஆனந்த் ஏவிஎம் ராஜேஸ்வரி, போன்ற பல தியேட்டர்கள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

ஜே இ இ முதன்மை தேர்வில் நெல்லை மாணவர் முதலிடம்

ராமாயணதிற்கு போட்டியாக களமிறங்கும் மகாபாரதம்.. ரசிகர்கள் ஆதரவு யாருக்கு?