ஆட்சியை மாற்ற பிறந்தவரே என விஜய் பிறந்தநாளையொட்டி தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்
50 வருட தமிழக அரசியலின் திராவிட கட்சிகள் ஆட்சியை மாற்ற பிறந்தவரே என விஜய் பிறந்தநாளையொட்டி தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அத்துடன் கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தவெகவில் ஒருங்கிணைக்கும் பணியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார்.
2026ல் சட்டமன்ற தேர்தலே இலக்கு என்ற அடிப்படையில் தவெக செயல்பட்டு வரும் நிலையில், மதுரையில் அவ்வப்போது ஓட்டப்படும் சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் மதுரையில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சுவரொட்டி ஒன்றை ஒட்டி உள்ளனர்.
அதில்,50 வருட தமிழக அரசியலின் திராவிட கட்சிகள் ஆட்சியை மாற்ற பிறந்தவரே என விஜய் பிறந்தநாளையொட்டி தவெகவினர் ஒட்டி உள்ள போஸ்டர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.