திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்காலில் கவிழந்த தனியார் பேருந்து – ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. கட்டிமேடு அருகே கீழசிங்களாந்தி பகுதியில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக தனியார் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை திருப்பிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து வாய்க்காலுக்குள் கவிழும் நிலைக்கு சென்றது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் அவசரகால பிரேக் அழுத்தி பேருந்தை வாய்க்காலுக்குள் விழாமல் தடுத்து நிறுத்தினார்.
இதனால் பேருந்தில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.