in

சிபிஎஸ்சி பள்ளி என்ற பெயரில் மெட்ரிகுலேஷன் பள்ளியை நடத்தி வந்த தனியார் கல்வி நிறுவனம்

சிபிஎஸ்சி பள்ளி என்ற பெயரில் மெட்ரிகுலேஷன் பள்ளியை நடத்தி வந்த தனியார் கல்வி நிறுவனம்

 

மயிலாடுதுறையில் சிபிஎஸ்சி பள்ளி என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளாக மெட்ரிகுலேஷன் பள்ளியை நடத்தி வந்த தனியார் கல்வி நிறுவனம், உண்மை வெளிவந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரத்தில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மயிலாடு துறையில் CBSE பள்ளி சான்றிதழ் உள்ளதாக 10 வருடமாக பெற்றோர்களை ஏமாற்றிய அழகு ஜோதி பள்ளி உண்மை தெரிந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அழகு ஜோதி என்கிற மெட்ரிகுலேசன் பள்ளி செயல்படுகிறது. அதன் கிளையாக கருவாழக்கரை பகுதியிலும் ஒரு பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

சாதாரனமாக தனியார் நடத்தும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் LKG வகுப்புகளுக்கு ஆண்டுக்கு. ரு 10 ஆயிரம் பெற்றால் இந்த பள்ளியில் சி.பி.எஸ்சி பள்ளி என பெற்றோர்களை கடந்த 10-ஆண்டுகளாக ஏமாற்றி LKG வகுப்புக்கே ஆண்டுக்கு, ரு 75 ஆயிரம் பெற்று உள்ளனர்.

மேலும 10, 12, படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு –ரு-1-75 லட்சம் பெற்று உள்ளனர் – இந்த பள்ளி சி.பி.எஸ்.சி பள்ளி இல்லை என 10 வருடமாக தெரியாத பெற்றோர்கள் நேற்று இரவு பள்ளியை முற்றுகையிட்டனர்.

நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு முன்வராத நிலையில் காவேரி நகர் பகுதியில் உள்ள அழகு ஜோதி பள்ளி எதிரில் 200 க்கு மேற்பட்ட பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியலால் மயிலாடுதுறை To தஞ்சை முக்கிய சாலை நான்கு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் சிவக்குமார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது தொடர்பாக புகார் அளிக்கும்படியும், அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

What do you think?

வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

தமிழ் வளர்ச்சித் துறை தாய்மொழி குறித்த விழிப்புணர்வு பேரணி