in

சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறிய தனியார் சொகுசு பேருந்து


Watch – YouTube Click

சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறிய தனியார் சொகுசு பேருந்து

 

நத்தம் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது தனியார் சொகுசு பேருந்து மோதியதில் ஒருவர் காயம் – பஸ்லிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்த தீயணைப்புத் துறையினர்

கோயம்புத்தூரில் இருந்து தேவகோட்டை நோக்கி நேற்று இரவு 11:00 மணி அளவில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயனிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. பேருந்தை மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 45) ஓட்டி வந்துள்ளார்.

இன்று அதிகாலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே உள்ள தடுப்பில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை தரும் ஒளிரும் பட்டைகள் ஏதும் இல்லாததால் ஓட்டுநர் கவனிக்க இயலாமல் போனது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது பலமாக மோதியது.

இதில் பேருந்தின் முன் பகுதி தடுப்பு மீது ஏறி நின்றது. திடீரென பேருந்து மோதியதில் ஏற்பட்ட பலமான சத்தம் கேட்டு பேருந்துக்குள் இருந்த பயணிகள் அலறியடித்தனர். பயணிகள் இறங்க வேண்டிய படிக்கட்டு பகுதி முற்றிலும் சேதம் அடைந்ததால் அந்த வழியாக பயணிகள் இறங்க முடியவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்புத் துறையினர் நத்தம் போலீசார் ஓட்டுனரின் இருக்கை வழியாக ஏணி மூலம் பேருந்துக்குள் இருந்த பயணிகளை ஒவ்வொருவராக கீழே இறக்கினர்.

இந்த விபத்தில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கிருங்காகோட்டையைச் சேர்ந்த நாகராஜன் மனைவி ராணி (வயது 42) என்பவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த வரை மீட்டு 108 வாகனம் மூலம் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது போன்று அடிக்கடி விபத்து நடக்கும் மெய்யம்பட்டி அருகே சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் ஒளிரும் பட்டைகள் அமைக்காததால் மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல்

அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்