பாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடியாக அமைய உள்ளது. காரணம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக உள்ள மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் ஆகியோர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜகவில் இணைவது குறித்து கமல்நாத்துடமிருந்தோ அல்லது நகுல்நாத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் உறுதிப்படுத்தவில்லை.
பாஜக செய்தித் தொடர்பாளரும், கமல்நாத்தின் முன்னாள் ஊடக ஆலோசகருமான நரேந்திர சலுஜா, தனது எக்ஸ் தளத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல்நாத் புகைப்படத்தை பதிவிட்டு “ஜெய் ஸ்ரீராம்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி.யான நகுல்நாத், தனது எக்ஸ் தளத்தில் உள்ள தனது சுயவிவர குறிப்பிலிருந்து ‘காங்கிரஸ்’ பெயரை நீக்கினார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் கூறுகையில்,நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கமல்நாத்திடம் பேசினேன்.
நேரு-காந்தி குடும்பத்துடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் எப்படி வெளியேறுவார் என்று எதிர்பார்க்க முடியும்? அப்படியொரு விஷயத்தை நாம் எதிர்பார்க்கவே கூடாது என்றும் அவர் கூறினார்.