துறையூர் அருகே பெருமாள் பாளையத்தில் சொத்து தகராறு
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பெருமாள் பாளையத்தில் சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட பகையில் அண்ணனை ஓட ஓட வெட்டிக் கொன்ற தம்பி கைது.
துறையூர் அருகே உள்ள பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய தம்பி சந்திரசேகர் இருவருக்கும் சொத்து தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்த பொழுது அங்கு வந்த தம்பி சந்திரசேகர் அண்ணனை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதனால் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி பயந்து ஓடி உள்ளார். அவரை ஓட ஓட துரத்தி சென்ற தம்பி சந்திரசேகர் அரிவாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார் கொலையாளி சந்திரசேகரை கைது செய்து கிருஷ்ணமூர்த்தியின் உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இதே சொத்து தகராறு பிரச்சனையின் காரணமாக தம்பி சந்திரசேகரை அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த தம்பி சந்திரசேகர் பலிக்கு பலியாக அண்ணன் கிருஷ்ணமூர்த்தியை வெற்றி கொன்றதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.