A.R. Rahman …. னை பிரிவதாக அறிவித்த மனைவி சாய்ரா பானு… அதிர்ச்சியில் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவுக்கு போறாத காலமா அல்லது சினிமா பிரபலங்கள் வாங்கி வந்த சாபமா..இன்னு தெரியலை, அண்மைக்காலமாக சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து விவகாரத்து செய்யும் நிலையில், இவர் விவாகரத்து செய்யப் போகிறார் என்ற தகவலை தான் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இது ஃபேக் நியூஸா என்று ரசிகர்கள் வலைதளத்தில் அதிர்ச்சியோடு வளைய வருகின்றனர்.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் முற்று புள்ளி வைப்பதாக அறிவித்தனர்.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் உலக அளவில் இசை சாதனை படைத்து பல விருதுகளை வென்றிருக்கும் இவர் சாய்ரா பானு என்பவரை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு Raheema, Khatija, என்ற இரு மகள்கள் ameen (அமீன்) என்ற ஒரு மகனும் உண்டு. A.R. Ragman எப்பொழுதுமே தன் குடும்பத்துடன் அன்பாக வலம் வருபவர். இவர்கள் இருவரும் இதுவரை எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததில்லை, தான் சினிமாவில் சாதிப்பதற்கு காரணம் தன் மனைவின் ஒத்துழைப்பும் புரிதலும் தான் காரணம் என்று A.R.பல மேடைகளில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்நிலையில் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா நேற்றிரவு ரகுமா….னை பிரிவதாக அறிவித்திருக்கிறார். நேற்று சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா தம்பதியர் பிரிந்து செல்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, திருமதி சாய்ரா தனது கணவர் திரு ஏஆர் ரஹ்மானை விட்டுப் பிரிவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளார்.. இருவருக்குள்ளும் ஆழ்ந்த அன்பு இருந்தபோதிலும், இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டு இருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் இந்த கடினமான காலகட்டத்தில் மக்களிடமிருந்து தனி உரிமை மற்றும் புரிதலை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும், ஏனெனில் அவர் தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்தை கடக்கஇருக்கிறார் என்று குறிப்பிட்டார். இன்று அதிகாலையில், மனைவி சாய்ராவின் வழக்கறிஞர்கள் பகிரங்க அறிக்கையை வெளியிட்ட பிறகு, பிரிவை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மௌனம் கலைத்தார்.
X தளத்தில் அவரது பதிவில், “நாங்கள் முப்பது வருடத்தை எட்டுவோம் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் பாரத்தால் நடுங்கக்கூடும். ஆனாலும், இந்த நொறுங்குதலில், நாங்கள் தவிக்கிறோம்., துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், இந்த பலவீனமான அத்தியாயத்தில் நாங்கள் நடக்கும்போது உங்கள் கருணைக்கும் எங்கள் தனியுரிமைக்கும் மதிபளிக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் என்றார். A.R Rahuman…இன் மூன்று பிள்ளைகளும் இவர்களின் முடிவு எங்களுக்கு அதிர்ச்சியை அளிகிறது.
இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளனர்.