in ,

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


Watch – YouTube Click

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

 

கொரடாச்சேரி மற்றும் புதுக்குடி பகுதிகளில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கழக இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் கொரடாச்சேரி பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் கொரடாச்சேரி பேரூர் செயலாளர் பூண்டி கலைவேந்தன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக மாவட்ட செயலாளர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து குடவாசல் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்குடி பகுதியில் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற குடவாசல் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்த வேண்டும், அனைத்து கிளை கழகத்திலும் கொடி கம்பங்களை புதுப்பிக்க வேண்டும், கல்லூரி மாணவர் இடையே கழகத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார் .

இந்தக் கூட்டங்களில் கழக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், பிரபாகரன், சேகர் கலியபெருமாள், பேரூர் செயலாளர்கள் பூண்டி கலைவேந்தன் மற்றும் சேரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

லோக்சபா தேர்தல் கூட்டணி போல், வருகிற சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமையும் – அமைச்சர் நேரு பேச்சு

நாமக்கல் மேலபேட்டபாளையத்தில் முத்தாலம்மன் திருவிழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்திகடன்