in

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கசென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கசென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

 

மதுரையில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கசென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு – காவல்துறை விசாரணை.

மதுரை மாநகர் செல்லூர் சர்ச் தெரு பகுதியை சேர்ந்த அழகர்சாமி இவர் அவனியாபுரத்தில் கோவில் ஒன்றில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி சந்திரா மற்றும் மகன் ராஜேஷ் உடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார்.

இந்நிலையில் அழகர்சாமியின் மகனான ராஜேஷ்(15) என்ற பள்ளி மாணவன் 10ஆம் வகுப்பு படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் 11ஆம் வகுப்பு படிப்பதற்கான பள்ளி கட்டணம் செலுத்தியுள்ளனர். இதனிடையே பள்ளி விடுமுறை என்பதால் இன்று காலை தனது நண்பர்கள் 4 பேருடன் ராஜேஷ் குளிக்கசென்றுள்ளார்.

மதுரை குலமங்கலம் வடுகபட்டி சாலை பகுதியிலுள்ள தோப்பு ஒன்றில் இருந்த கிணற்றில் நண்பர்களுடன் குளித்துகொண்டிருந்த போது திடிரென கிணற்று நீரில் குதித்தபோது உள்ளே சென்றுள்ளார். அப்போது மற்ற நண்பர்கள் விளையாட்டுக்காக தண்ணீரில் மூழ்கியதாக நினைத்துள்ளனர்.

நீண்ட நேரமாகியும் வெளியில் வராத நிலையில் நண்பர்கள் அனைவரும் காப்பாற்ற முயன்றுள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்காமல் ராஜேஷின் பெற்றோருக்கு மூழ்கியதாக கூறியுள்ளனர்.

ஆனால் பெற்றோர் அங்கு வருவதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்

உயிரிழந்த பள்ளி மாணவன் ராஜேஷ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11 ஆம் வகுப்பிற்கான பள்ளி கட்டணம் செலுத்திய நிலையில் சிலம்பாட்டத்தில் சிறப்பாக விளையாடி பல்வேறு பதக்கங்களை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

மதுரையில் பள்ளி விடுமுறை நாளில் கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன தவறு? – துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

லாவோஸ், கம்போடியாவில் வேலையா ? எச்சரிக்கை தேவை