in

வேதாரண்யத்தில் இருந்து தண்டிக்கு தனி ரயில் இயக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் இரா. முத்தரசன் பேட்டி

வேதாரண்யத்தில் இருந்து தண்டிக்கு தனி ரயில் இயக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் இரா. முத்தரசன் பேட்டி

 

உப்பு சத்தியாகிரக போராட்டத்தை கவுரவிக்கும் வகையில் வேதாரண்யத்தில் இருந்து தண்டிக்கு தனி ரயில் இயக்க வேண்டும் திருத்துறைப்பூண்டியில் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் இரா. முத்தரசன் பேட்டி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்க்காக வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது…

கல்வி என்பத மனிதனுடைய வாழ்க்கைக்கு முன்னேற்றத்திற்கு விழிப்புணர்வுக்கு அனைத்தும் பயன்படக்கூடியது. பெரும்பான்மை மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட நிலை உடைக்கப்பட்டு இப்போது அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அந்த வாய்ப்பை மீண்டும் பறிக்கக் கூடிய நிலையில் மீண்டும் மத்திய அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கை என்கிற ஒரு கல்விக் கொள்கையை கட்டாயமாக திணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. திட்டத்தை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்குரிய நிதி வழங்கப்படும் இல்லையென்றால் நிதி வழங்கப்பட மாட்டாது என மறுக்கப்படுகிறது.

தமிழக ஆளுநர் தேசிய கல்வி கொள்கை தான் சிறந்தது அதனை ஏற்க வேண்டும் என்று தெரிவிப்பது மட்டுமல்ல தங்களது மனுதர்மக் கொள்கையை அமல்படுத்தக் கூடிய வகையில் ஆளுநர் மாளிகை தவறான முறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தான் சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் ஆகிய அரசு பள்ளிகளில் மகாவிஷ்ணு கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு சொற்பொழியாற்றுகிறார். யாருடைய அனுமதியும் இல்லாமல் ஒரு சொற்பொழிவாளர் அரசு கல்வி நிலையங்கள் சொற்பொழிவு ஆற்றுவது என்பது இயலாது முடியாது . மிக மோசமான சொற்பொழிவு நடைபெற்றிருக்கிறது. அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கிறார். முதலமைச்சரந்த பிரச்சினை தலையிட்டு இருக்கிறார்.

நடவடிக்கை எல்லாம் வரவேற்கத்தக்க தான் என்று சொன்னாலும் கூட அரசு பள்ளிகளில் இப்படி பிற்போக்குத்தனமான விஞ்ஞானத்திற்கு புறம்பான மூட நம்பிக்கை பழக்க வழக்கங்களை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் ஒரு தனிப்பட்ட நபர் சொற்பொழிவு ஆற்றுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்கிற கேள்வி எழுகிறது கடுமையான கண்டனங்களும் எழுந்து இருக்கிறன இது இங்கு மட்டும்தான் நடைபெற்றதா ? தமிழ்நாட்டில் பல இடங்களிலும் ஏற்கனவே நடைபெற்று இருக்கிறதா? தொடர்ந்து நடைபெறுமா? என்ற கேள்விகள் எ எழுகிறது. ஆகவே கல்வியை காப்பாற்றப்பட அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையிலிருந்து காரைக்குடி வரை ஏற்கனவே இயக்கப்பட்ட கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். குறிப்பாக திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை அறந்தாங்கி, பட்டுக்கோட்டை இந்த பகுதி மக்கள் சென்னைக்குச் செல்வதற்கு நேரடியாக எந்த ரயில் வசதியும் இல்லை ஆகவே கம்பன் ரயிலை இயக்குவதற்கும்.

விடுதலைப் போராட்டத்தில் உப்பு சத்தியாகிரக போராட்டம் என்பது மிக முக்கியமான போராட்டம். போராட்டத்தை கௌரவிக்க கூடிய வகையில், மதிப்பளித்து கூடிய வகையில் வேதாரண்யத்தில் இருந்து தண்டி வரையில் ஒரு தனி ரயில் இயக்குவதற்கும், . ரயிலுக்கு உப்பு சத்தியாக போராட்ட நினைவு ரயில் என பெயர் சூட்டவும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்து மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள் அவருடைய உயிருக்கும், உடைமைக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தற்பொழுது கூட இலங்கை சிறைச்சாலைகள் மீனவர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தூத்துக்குடி சேர்ந்த மீனவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. செலுத்தவில்லை எனறால் ஆறு மாத கடுங்காவல் தண்டனை என்று குறிப்பிடுகிறார்கள். ஆகவே ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வேண்டும். மீனவர்கள் பாதிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தபோது கட்சத்தீவு குறித்து நிறைய பேசினார். காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்ற கழகமும் இலங்கைக்கு கட்சத்தீவை தாரைவாத்து கொடுத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். உண்மையிலேயே கட்சத் தீவு குறித்து அவருக்கு அக்கறை இருக்குமேயானால் கட்சத் தீவை திரும்ப மீட்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி என்பது இல்லாமல் போய்விட்டது. டெல்டா மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு சம்பா சாகுபடி மட்டும் தான் நடைபெற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் விதை கிடைப்பது அரிதாக இருக்கிறது என்று விவசாயிகள் பரவலாக குறிப்பிடுகிறார்கள். விதைகளுக்கு ஒரு செயற்க்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, தனியார் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அரசு உடனடியாக தலையிட்டு கூட்டுறவு அமைப்புகளின் மூலமாக அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான அளவிற்கு விதைகள் கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதேபோல உரம் பூச்சி மருந்து இவைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கும், சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கூட்டுறவு வங்கிகள் கடன் கிடைப்பதற்கும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

What do you think?

33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடத்த அனுமதி

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ட்ரோன் மூலம் பொதுமக்கள் மீது புனித நீர்