பாபநாசம் அருகே அடுத்தடுத்து சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வேம்பையாபுரத்தை சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் அனவன் குடியிருப்பை சேர்ந்த சங்கர் ஆகிறது ஆடுகளை தாக்கியதன் அடிப்படையில் இரு பகுதிகளிலும் வனத்துறையினர் சார்பாக கூண்டு வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து கடந்த சனிக்கிழமை வேம்பையபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியதை தொடர்ந்து அந்த சிறுத்தையை வனத்துறையினர் அப்பர் கோதையார் வணபகுதியில் பத்திரமாக விட்டனர்.
இந்த நிலையில் மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்டதால் வேம்பையாபுரம் பகுதியில் வனத்துறையினர் சார்பாக மீண்டும் கூண்டினை வைத்துள்ளனர். இதேபோல் அனவன்குடியிருப்பு பகுதியில் கூடுதலாக மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அணவன் குடியிருப்பு பகுதியில் 2, வேம்பையாபுரத்தில் ஒன்று என மொத்தமாக 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு அனவன்குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டு ஒன்றில் சிறுத்தை சிக்கியுள்ளது.
தொடர்ந்து இன்று காலை வேம்பையாபுரம் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது இதனை அடுத்து சிறுத்தைகளை அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான பணிகளில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.