தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம்
தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம், தாலுக்கா அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்தும் இன்று அனைத்து வட்டாட்சியர்கள் அலுவலகத்திலும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
ஆய்வாளர் துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும் நிலுவை கோரிக்கைகள் மீது உரிய உத்தரவு பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும் பொது மாறுதல் நடைமுறையை நில அளவை பதிவேடுகள் துறையில் மாற்றி அமைத்திட எடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தரங்கம்பாடி சீர்காழி குத்தாலம் ஆகிய நான்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன் காரணமாக தாலுகா அலுவலகங்களில் நில அளவை பணிகள் பாதிக்கப்பட்டன மாவட்ட தலைவர் ஆர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.