ஆறு வயதில் மலையேற்றத்தில் சாதித்து வரும் சிறுமி
நெல்லையில் ஆறு வயதில் மலையேற்றத்தில் சாதித்து வரும் சிறுமி. உலகின் மிக உயரமான மலையான இமயமலையில் ஏற வேண்டும் என்ற லட்சியத்தோடு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீதர் வெங்கடேஷ் இவரது மகள் லலிதா ரேணு(6) இவர் அதே பகுதியில் சங்கர்நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் வெங்கடேஷ் குடும்பத்தோடு வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார் அப்போது ஏராளமானோர் சின்ன குழந்தைகளுடன் மலை ஏறுவதை பார்த்து சிறுமி லலிதா ரேணுவுக்கு மலையேற்றம் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
எனவே அடிக்கடி மலையேற்றம் செல்ல வேண்டும் என்பது சிறுமியின் ஆசையாக மாறியது அன்று முதல் ஸ்ரீதர் வெங்கடேஷ் அடிக்கடி பல்வேறு மலைகளுக்கு லலிதா ரேணுவை அழைத்துச் சென்றுள்ளார் குறிப்பாக உத்தரகான்ட் மாநிலத்தில் உள்ள 11760 அடி உயரமுள்ள கடினமான கேதர்நாத் மகாராஷ்டிராவன் ஹரிகர் கோட்டை மலை கேரளாவின் சபரிமலை மற்றும் தமிழகத்தில் உள்ள வெள்ளியங்கிரி, சதுரகிரி மலை மலை உட்பட சுமார் 30 மலைகளில் சிறுமி தனது இளம் வயதிலேயே மலையேற்றத்தை முடித்துள்ளார் இருப்பினும் மலையேற்றத்தின் மீது தீராத ஆர்வம் கொண்ட சிறுமி லலிதா ரேணுவுக்கு உலகிலேயே மிக உயரமான இமயமலையில் ஏற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.
எனவே அதற்கான முழு பயிற்சியில் தற்போது சிறுமி ஈடுபட்டு வருகிறார் இமயமலையில் ஏறுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை சுமார் 29 ஆயிரம் அடி உயரமுள்ள இமயமலை 2400 கிலோமீட்டர் தூரம் கொண்டது.
ஆனாலும் தனது ஆறு வயதில் நிச்சயம் இமயமலை ஏறியே ஆக வேண்டும் என்ற முனைப்போடு சிறுமி லலிதா ரேணு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது பெற்றோர்களும் சிறுமிக்கு ஊக்கமாக இருந்து வருகின்றனர்