திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உணவு விடுதிக்கு அருகே நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு.
தீயணைப்பு துறையினர் லாவமாக பாம்பினை பிடித்து புறநகர் பகுதியில் கொண்டு விட்டனர்.
திண்டுக்கல் ஏர்போர்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்.
இவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள உணவு விடுதிக்கு தேனீர் அருந்துவதற்காக வந்து தனது இருசக்கர வாகனத்தை உணவு விடுதி வாசல் முன்பு நிறுத்தி சென்றுள்ளார்
அப்பொழுது அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக வெளியேறிய
கட்டு விரியன் பாம்பு ஒன்று இருசக்கர வாகனத்தில் புகுந்துள்ளது
இதை கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வாலிபரிடம் இருசக்கர வாகனத்திற்குள் பாம்பு புகுந்து விட்டதாக தெரிவிக்கவே அந்த பகுதி பரபரப்பானது
இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தங்கள் வைத்திருந்த பாம்பு பிடிக்கும் கருவியைக் கொண்டு லாவமாக பாம்பை பிடித்து சென்றனர்.
ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததை அங்கு குடியிருந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.