in ,

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது

 

அருள்மிகு திரிபுராந்தீஸ்வரர் – கோமதி அம்பாள் திருக்கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது அருள்மிகு திரிபுராந்தீசுவரர் திருக்கோயில்.

இத்திருக்கோயில் பழமையும், வரலாற்று பெருமையும் கொண்டு கடன் நிவா்த்தி ஸ்தலமாக வணங்கப்பட்டு வருகின்றது. இங்கு சுவாமி , அம்பாள் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனா்.

ஸ்ரீசுப்ரமணியருக்கு தனிச்சன்னதி உண்டு. மூலவரான சண்முகர் கிழக்கு நோக்கி ஆறுமுகத்துடனும், பன்னிரு கைகளுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அமைந்து இருப்பது விசேஷமான ஒன்றாகும்.

இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. அதில் ஒரு நிகழ்வாக சுவாமி அம்பாள் திருக்கோயிலுக்கு நடுநாயகமாய் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணியருக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

ஸ்ரீ சுப்பிரமணியர் உடனுறை வள்ளி தெய்வானை அம்பாளுக்கு பால், தயிர் மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக சன்னதி முன் யாககுண்டம் வளா்க்கப்பட்டு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில் தேய்பிறை அஷ்டமியை சிறப்பு அபிஷேகம்

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் என அமைச்சர் சாய் சரவணன் பேட்டி