in

புத்தாண்டை முன்னிட்டு பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்

புத்தாண்டை முன்னிட்டு பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்

 

தொடர் விடுமுறை முன்னிட்டு பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் இக்கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் – சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தொடர் விடுமுறை என்பதாலும் – புத்தாண்டு என்பதாலும் வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பெரிய கோவிலில் குவிந்து பெரிய கோவிலின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் புத்தாண்டை முன்னிட்டு பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

What do you think?

65 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ள மாதிரிமங்கலம் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு

ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி ஆலயத்தில் 5 லட்சம் புது ரூபாய் நோட்டால் சிறப்பு அலங்காரம்