திருவாரூர் பூலோகத்தில் காத்யாயினி தேவியாக பிறந்த பார்வதி தேவியை சிவபெருமான் கைலாயத்தில் இருந்து மாப்பிளை கோலத்தில் பூலோகம் வந்து இறைவியை திருமணம் செய்துகொண்ட தலமாக விளங்கும்.
வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலை அருள்மிகு வீழிநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள மாப்பிள்ளை சுவாமி என அழைக்கப்படும் .
அருள்மிகு காத்யாயினி உடனுறை கலயாணசுந்தரேஸ்வரர் சுவாமிக்கு ஆடி மாதபிறப்பை ஒட்டி இன்று சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
இதை யொட்டி சுவாமிக்கு திரவியம், மஞ்சள்,அரிசிமாவு, பஞ்சாமிர்தம், தேன்,பால்,தயிர்,இளநீர், பழசாறு,விபூதி,சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டபின் பூஜிக்கப்பட்ட கலசாபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்காரதீபம்,கும்பதீபம்,தட்டங்கள்,சோடஷுபச்சாரங்கள் கட்டப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சுவாமியை வழிப்பட்டனர்.