நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பஜனை பாடி பின்னர் குழந்தைகளுக்கு மெஹந்தி மற்றும் நமது பாரம்பரிய வளையல் அணிவித்து சுண்டல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நவராத்திரி பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக தினமும் கொண்டாடப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கமான உற்சாகத்துடன் குத்தாலத்தில் அமைந்துள்ள சுபிக்ஷா இந்தி வித்தியாலய பள்ளி மாணவிகள் தினமும் ஒரு கோயிலில் பஜனை பாடல்கள் பாடி கோலாட்டம் ஆடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
அதன்படி நேற்று நவராத்திரியை முன்னிட்டு மாணவர்களுக்கு மெஹந்தி மற்றும் நமது பாரம்பரிய வளையல் அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றன நவராத்திரி என்றாலே பெண் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஆதனால் சுபிக்ஷா ஹிந்தி வித்யாலயா சார்பாக குழந்தைகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மெஹந்தி வளையல் மற்றும் தாம்பூலம் கொடுக்கும் நிகழ்ச்சி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.