புதுச்சேரி கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. பேருந்துகளில் ஆவணங்கள் உரிமை தன்மைகளை ஆய்வு.
புதுச்சேரியில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும். மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை அமல்படுத்தும் நோக்கிலும், புதுச்சேரி பகுதிக்குட்பட்ட கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம் 01-06-2024 மற்றும் 02-06-2024 ஆகிய தேதிகளில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் சரக்கூர்தி முனையத்தில் நடைபெற்று வருகிறது.
சிறப்பு ஆய்வு முகாமிற்கு, அனைத்து கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 900 வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளது. இதற்கென போக்குவரத்துத் துறையில் வாகன ஆய்வாளர்கள்/உதவி வாகன ஆய்வாளர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு ஆய்வில் வாகனங்களை ஆய்வு செய்து தகுதியுள்ள வானங்களுக்கு சான்றிதழ் அளித்து வாகனத்தின் முகப்பில் ஒட்டப்படும் இந்த வாகனங்கள் மட்டுமே மாணவர்களை பயணிக்க சாலையில் அனுமதிக்கப்படும்.
மீறினால் உடனுக்குடன் பறிமுதல் செய்து தருந்த குற்றவியல் நடடிக்கை மேற்கொள்ளப்படும? இது போன்ற சிறப்பு ஆய்வு காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் பகுதியிலும் மேற்கொள்ளப்படுகிறது. இன்று முதல் நாள் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஆய்வுக்காக நிறுத்தப்பட்டுள்ளது இதனை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆவணங்கள் மற்றும் வாகனத்தின் உறுதித் தன்மை பரிசோதனை செய்து வருகின்றனர்..
அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மேற்குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் தங்கள் வாகனங்களை ஆய்விற்குட்படுத்தி மாணவ மாணவியரின் பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் போக்குவரத்துத்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.