புதுச்சேரி அடுத்து திருவக்கரையில் அமைந்துள்ள தேசிய கல்மரப் பூங்கா சுற்றுலா தளத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மை பணியும்,பாரம்பரிய பூங்காக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி நடை பயணமும் நடைபெற்றது,இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான திருவக்கரை கிராமத்திற்கு கிழக்கே ஒரு கி.மீ தொலைவில் உள்ள மேட்டு நிலப் பகுதிகளில் மணல் பாறைகளுக்கிடையே சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியிலிருந்த காடுகளிலிருந்து ஆற்றில் அடித்துக் சொல்லப்பட்ட மரங்கள் தற்போது கல் மரங்களாக மாறி தற்போது கல்மரப் பூங்காவாக காட்சியளிக்கிறது. இவை இந்திய தொல்லியல் துறையால் சுற்றுலா தளமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,இந்திய புவியியல் ஆய்வுத்துறை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பிரிவு சார்பில் பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான திருவுக்கரையில் உள்ள தேசிய கல்மர பூங்காவில் சிறப்பு தூய்மை பணி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. இதனை அடுத்து பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி கல்மர பூங்காவில் விழிப்புணர்வு நடை பயணமும் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இந்திய புவியியல் ஆய்வுத்துறை டி.டி.ஜி. அஜய்குமார். இயக்குனர் மாரியப்பன், நாகேந்திரன், இயக்குனர்,இந்திய புவியியல் ஆய்வுத்துறை, சென்னை.இசக்கி முத்து சுரங்க அமைச்சக துணை செயலாளர் வினோத்குமார் மற்றும் திருவக்கரை ஊராட்சி தலைவர் மோகன ராமச்சந்திரன் மாவட்ட சுற்றுலா அதிகாரி ஜனார்த்தனன் திருவக்கரை அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.