in

நாட்டரசன்கோட்டை ஶ்ரீகண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் பௌர்ணமி திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை

நாட்டரசன்கோட்டை ஶ்ரீகண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் பௌர்ணமி திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பல்லக்கு திரு உலா நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி திருநாளை முன்னிட்டு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகளும் மற்றும் பல்லக்கு திருஉலாவும் நடைபெற்றது முன்னதாக சன்னதி அருகே உள்ள மண்டபத்தில் உற்சவர் கண்ணுடைய நாயகியம்மனை மகிஷாசுரமர்த்தினி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அலங்கார தீபம் கும்ப தீபம் ஏக முக தீபம் நாகதீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பித்து மங்கள வாத்தியங்களுடன் பல்லக்கில் எழுந்தருளி கோவில உள்பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மனை வழிபட்டனர்.

What do you think?

தெக்கூர் அருள்மிகு ஸ்ரீ உலகுடையயம்மன் திருக்கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை