சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் ஐப்பசி மாத முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
முன்னதாக மூலவர் சன்னதியில் இன்று நிலையில் அருள் பாலிக்கும் மூலவர் சுந்தரராஜப் பெருமாள் மற்றும் தாயார் உற்சவ தெய்வங்களுக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் சந்தனம் தேன் இளநீர் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுந்தர்ராஜ பெருமாளை வழிபாடு செய்தனர்.