கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாடு அரசு மாதாந்திர உதவித்தொகையை கூடுதலாக வழங்கி கோரி மாநிலம் தழுவிய சிறை நிரப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் போலீசாரால் கைது….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் உதவித் தொகையை மற்ற மாநிலங்களைப் போல் கூடுதலாக உதவித் தொகை வழங்க வலியுறுத்தியும், 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4:00 மணி நேரத்திற்கு பணி ஊதியம் ரூ. 319 ஆக வழங்கிட வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நகரத் தலைவர் பார்க் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட துணை தலைவர் அன்புமணி , ஒன்றிய செயலாளர் தாமோதரன், ஒன்றிய பொருளாளர் மகேஷ்வரி மற்றும் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 200க்கும் மேற்பட்டோர்களை போலீசார் கைது செய்தனர்.