வேதாரண்யத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவி மாநில அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் முதலிடம்
வேதாரண்யத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவி மாநில அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் முதலிடம்; ஆசிரியை ஆனந்த் கண்ணீர் வடித்தது சக ஆசிரியருக்கு நன்றி தெரிவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது:
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கலைத்திருவிழா நடத்தி வருகிறது.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவி மரியா வண்ணந்தீட்டுதல் போட்டியில் கோயம்பத்துரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 38 மாவட்டங்கள் பங்கேற்றன.
நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அரசு உதவி பெரும் பள்ளிகள் சார்பாக 1,2 வகுப்புகள் பிரிவில் இவர் பங்கேற்று முதலிடம் பிடித்தார் அவரை அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாநில தலைவர் கிரிதரன் நேரடியாக அந்தப் பள்ளிக்குச் சென்று மாணவி மரியாவுக்கு சால்வை அணிவித்து மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பள்ளி ஆசிரியை வசந்தா சித்திரவேல் போட்டி அறிவித்ததில் இருந்து உறங்கவில்லை நமது பள்ளி மாணவி வெற்றி பெற்ற தகவல் வந்ததும் ஆனந்தத்தில் உறக்கம் வரவில்லை மாணவியை வெற்றி பெற செய்ய சக ஆசிரியர்களும் அரும்பாடு பட்டார்கள் என கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இந்த சம்பவம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.