in

நாகூர் அருகே கடையில் திடீர் தீ விபத்து 2 மணி நேரம் போராடி அனைத்தனர்


Watch – YouTube Click

நாகூர் அருகே கடையில் திடீர் தீ விபத்து 2 மணி நேரம் போராடி அனைத்தனர்

 

நாகை மாவட்டம் நாகூர் அருகே வடக்கு பால்பண்ணைச் சேரி பகுதியில் தினேஷ்குமார் என்பவர் பழைய நான்கு சக்கர வாகனம், இரண்டு சக்கர வாகனம், முன்று சக்கர வாகனம் ஆகியவற்றை விலைக்கு வாங்கி அதை உடைத்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பழைய டயர், ஆயில், டீசல் ஆகியவற்றில் தீ பட்டதில் வெடித்து சிதறியது தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

தகவல் அறிந்த நாகை தீ அணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தது. ஆனால் தீ கட்டுக்குள் வராமல் பரவி மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது.

இதை அறிந்த மாவட்ட தீ அணைப்பு அலுவலர் சரவணபாபு உத்தரவின் பேரில்நாகை, கீழ்வேளூர், திருமருகல், சிபிசிஎல் சேர்ந்த 4 தீ அணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. 4 தீ அணைப்பு வாகனங்களும் ஒன்றாக சேர்ந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்தின் காரணமாக நாகை- நாகூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. தீ விபத்து குறித்து நாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

நாங்கள் ராஜா ராணி வேறு கட்சிக்கு நாங்கள் வேறு கட்சிக்கு போய் பிச்சை எடுக்கவேண்டும்

பேனரில் தன் பெயர் இல்லாததால் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆத்திரம்