10 நாளில் திருமணம் எமனாக வந்த கரும்பு டிராக்டர்
செஞ்சி அருகே கரும்பு டிராக்டர் மோதிய விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலி-உடலை எடுக்க விடாமல் இரண்டு மணி நேரமாக பொதுமக்கள் சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சே. பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகள் காயத்ரி இவருக்கு 10 நாளில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள இருந்த மாப்பிள்ளை பாலமுருகனுடன் இசுக்கை கிராமத்திற்கு சென்று வீடு திரும்பிய போது நல்லான்பிள்ளைபெற்றாள் மார்க்கத்திலிருந்து பாலப்பாடியில் உள்ள கரும்பு ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டரை பாலமுருகன் முந்தபோது பின்னால் அமர்ந்திருந்த காயத்ரி நிலை தடுமாறி விழுந்ததில் டிராக்டர் டிரைலர் சக்கரத்தின் மீது சிக்கி காயத்ரி உடல் மீது நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் நேரடியாக சென்று காயத்ரி உடலை மீட்டபோது கிராம பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று இரண்டு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உடலை எடுக்க விடாமல் கிராம பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் இரண்டு மணி நேரமாக சாலை மறியல் செய்து வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அந்த சாலையில் மட்டுமே சென்ற இரண்டு மாதத்தில் இதுவரையிலும் கரும்பு டிராக்டர் மோதிய விபத்தில் தொடர்ந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.