in

விநாயகர் சன்னதி முன்பாக சாலையோரத்தில் நடந்த திடீர் கல்யாணம்

விநாயகர் சன்னதி முன்பாக சாலையோரத்தில் நடந்த திடீர் கல்யாணம்

 

போலீசார் படம் பிடிக்க பொதுமக்கள் வேடிக்கை பார்க்க கங்கை அம்மன் கோயில் வாசலில் உள்ள விநாயகர் சன்னதி முன்பாக சாலையோரத்தில் நடந்த திடீர் கல்யாணம்………

காதலித்த பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் காதலித்த பெண் குள்ளமாக இருப்பதாக உறவினர்கள் கூறியதால் காதலியை கைவிடத் துணிந்த காதலன்……

திருவண்ணாமலை அடுத்த சானாநந்தல் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான சின்னராசு என்ற வாலிபர் அதே கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான தனலட்சுமி என்பவரை காதலித்து ஏழு மாதம் கர்ப்பம் ஆக்கிய நிலையில் தற்போது காதலித்த பெண் குள்ளமாக இருப்பதாக கூறி திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தனலட்சுமி குடும்பத்தினர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சின்னராசுவை அழைத்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஒத்து வந்த நிலையில் மாப்பிள்ளை சின்ராசு திருமணம் செய்து கொள்ள முரண்டு பிடித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தனலட்சுமி குடும்பத்தினர் போலீசாரின் முன்னிலையிலேயே திருமணம் நடைபெற வேண்டும் என்று சொல்லியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வட வீதி சுப்பிரமணியர் திருக்கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெண் போலீசார் ஒருவருடன் சென்ற நிலையில் அங்கு கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டதால்.

திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் உள்ள கங்கை அம்மன் கோவில் விநாயகர் சன்னதி முன்பாக சாலையோர பிளாட்பார்மில் ஊர் மக்கள் பார்க்க போலீசார் படம் பிடிக்க இரு வீட்டார் முன்னிலையில் சின்ராசு தனலட்சுமி திருமணம் நடைபெற்றது.

What do you think?

தெய்வீகத் திருமணம் அன்னபூரணி அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வு

ஆடு மேய்க்க லஞ்சம் வாங்கிய சாத்தனூர் பெண் வன காப்பாளர் இடமாற்றம்