நண்பருடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற இடத்தில் நாயை விரட்டிச் சென்று மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமச்சந்திராபுரம் பகுதி சேர்ந்தவர் உதய்குமார் ( 22).
ஹைதராபாத சந்தநகரில் இருக்கும் விவி பிரைடு ஹோட்டலில் அவருடைய நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் பார்ட்டி நேற்று நடைபெற்றது.
ஹோட்டலின் மூன்றாவது மாடியில் அரை ஒன்றை எடுத்து அங்கு நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடினார் உதய் குமார்.
அப்போது விதி வசத்தால் உதய் குமார் ஹோட்டல் அறையில் இருந்து வெளியில் வந்தார்.
அறைக்கு வெளியே எமன் போல் காத்து கொண்டிருந்த நாய் ஒன்று அவரைப் பார்த்து குறைத்தது.
இதனால் அந்த நாயை விரட்ட முயன்றார் உதயகுமார்.
நாயை விரட்டி கொண்டு வேகமாக ஓடிய உதய்குமார் நிலை தடுமாறி மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னல் மீது சாய்ந்து அங்கிருந்து கீழே விழுந்து உடல் சிதறி பலியானார்.
சம்பவம் பற்றி உதயகுமார் நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்துகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் உணவு டெலிவரி பாய் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வீடு ஒன்றிற்கு உணவு டெலிவரி செய்ய சென்றபோது அங்கிருந்த நாய் அவரை விரட்டிய நிலையில் நாய்க்கு பயந்து ஓடிய அந்த உணவு டெலிவரி பாய் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இறந்துபோனது குறிப்பிடத்தக்கது.