in ,

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை, நுட்பமான முறையில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண்கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜீன் 18-ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை சூது பவளம், தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள்,கண்ணாடி மணிகள்,வட்ட சில்லு,பழமையான கற்கள் உள்ளிட்ட 3210-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை மற்றும் நுட்பமான முறையில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுடுமண் குடுவையை முன்னோர்கள் திரவ உணவுகளை உண்பதற்கு பயன்படுத்தி இருக்கலாம் எனவும் வாணிபம் தலைதோங்கியதற்கு சான்றாக சுடுமண் முத்திரையும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தொல்லியல் தள இயக்குனர் பொன் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்

What do you think?

செஞ்சி அருகே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு கூலி வழங்காத ஒப்பந்ததாரரை கண்டித்து முற்றுகை போராட்டம்

காரியாபட்டி பேரூராட்சிக்கு குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்துள்ள கழிவுநீரால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்