in

மாதம் ஆயிரம் ரூபாய் என்பது ஒரு ஏமாற்று…திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு


Watch – YouTube Click

மாதம் ஆயிரம் ரூபாய் என்பது ஒரு ஏமாற்று…திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு

 

திருவாரூர் மாவட்டம் திருக்கரவாசலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முன்னதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் கேக் வெட்டினார்.

அதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் ஆகியவற்றை வீடு வீடாக கொடுத்தோமே இன்றைக்கு என்ன கொடுக்கிறார்கள்.

ஆயிரம் ரூபாய் பணம் என்கிற ஏமாற்று நடக்கிறதே. ஆயிரம் ரூபாயில் மிக்சி கிரைண்டர் வாங்க முடியுமா. இந்த ஆயிரம் ரூபாய் பணம் என்பது 2 கோடியே 14 லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டும் ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு கொடுப்பதாக கூறுகிறார்கள். பாதிக்குப் பாதி கொடுக்கிறார்கள். அனைவருக்கும் உரிமை தொகை கொடுக்கிறேன் என்று கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள்.

520 வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிச்சாமி கிளைக் கழகச் செயலாளராக இருந்து பொதுச் செயலாளராக உயர்ந்தவர். ஆனால் திமுகவில் யார் தலைவர் அண்ணாவிற்கு பிறகு கருணாநிதி தலைவர். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் இன்று தலைவராக இருக்கிறார். அவர் தலைவராக இருக்கும்போதே அடுத்த தலைவராக உதயநிதி உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இது வாரிசு கட்சி. அதிமுக அவ்வாறு இல்லை.அதிமுகவை பொருத்தவரை கிளை செயலாளராக இருந்தவர் இன்றைக்கு பொதுச் செயலாளராகி முதல்வராக இருக்கிறார். அதுதான் அண்ணா திமுக என்று பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

பிரபல நடிகர் ஒருவர் என்னை காதலித்து ஏமாற்றியது உண்மை தான்.. நடிகை கிரண் ஆதங்கம்

தேரழுந்தூர் அன்னை ஆயிஷா சித்தீக்கா ரளி அன்ஹா பெண்கள் அரபிக் கல்லூரி முப்பெரும் விழா நடைபெற்றது